சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் தளர்வற்ற ஊரடங்கு ஒருவார காலத்துக்கு அமல்படுத்தப் பட்டது ஏன் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
"தேவையான உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ளவே சில தளர்வுகளை அறிவித்திருந்ேதாம். ஆனால், அந்த தளர்வுகளைச் சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதை வழக்கத்தில் கொண்டனர்.
"மக்களின் நன்மை கருதி, அவர்களின் உயிரைப் பாதுகாக்கவே இந்த ஊரடங்கு. அதனை உணராதவர்களாக பொது மக்களில் சிலர் இருப்பது வேதனை தருகிறது. முழு ஊரடங்கை சிலர், ஏதோ விடுமுறைக் காலமாக நினைத்து ஊர் சுற்றி வருகிறார்கள்.
"இது விடுமுறைக் காலம் அல்ல, கொரோனா காலம் என்பதை உணராமல் இன்னமும் சிலர் உள்ளனர்.
"கிருமியை வாங்கிக் கொள்ளவும் மாட்டேன், பிறருக்கு கொடுக்கவும் மாட்டேன்' என்று பொது மக்கள் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டும்தான் இந்த நோய்த் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
"கடந்த ஓராண்டில் விலைமதிப்பற்ற மனித உயிர்களை நாம் இழந்துள்ளோம். பல குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
"மருத்துவர்கள், தாதியர்கள், முன்களப் பணியாளர்கள் அடைந்துள்ள துயரங்கள் அளவில்லாதது. ஏராளமான மருத்துவர்களை யும் நாம் இழந்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.

