பேரனுக்கு எழுதிய சொத்தை ரத்து செய்த ஆட்சியர்

பேரனுக்கு எழுதிய சொத்தை ரத்து செய்த ஆட்சியர்

1 mins read
4da9a494-a679-4972-9de1-2ef136150017
-

திண்­டி­வ­னம்: வய­தான காலத்­தில் தன்­னைக் கவ­னிக்­கா­மல் இருந்த பேர­னுக்­குத் தான் எழு­திக்­கொடுத்த பத்­தி­ரப்­ப­திவை ரத்து செய்யும்படி திண்­டி­வ­னம் உதவி ஆட்­சி­ய­ரி­டம் 101 வயது முதியவர் ஒரு­வர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

இதன்படி, பலரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் இப்போது பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்­பு­ரம் மாவட்­டம், செஞ்சி அருகே உள்ள சத்­தி­ய­மங்­க­லம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சின்­னப்­பன், 101. இவர், கடந்த பிப்­ர­வரி மாதம் திண்­டி­வ­னம் உதவி ஆட்­சி­யர் அனு விடம் மனு ஒன்றை அளித்­தார்.

அதில், வய­தான காலத்­தில் என்­னைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக எனக்­குச் சொந்­த­மான 2.25 ஏக்­கர் நிலத்தை 2008ல் என் மகன் வழி பேரன் மாசி­லா­ம­ணிக்­கு தான செட்­டில்­மென்ட் செய்துகொடுத்தேன்.

ஆனால், அவர் என் மீது எந்த அக்­க­றை­யும் காட்டி பரா­ம­ரிக்­க வில்லை. வய­தான காலத்­தில் தனி­யாக சிர­மப்­பட்டு வரு­கி­றேன். எனவே, பேர­னின் பெய­ரில் நான் எழு­திய ப­திவை ரத்து செய்யவேண்­டும் என கேட்­டி­ருந்­தார்.

சின்­னப்­ப­னின் மகன்­கள், மகள் கள் ஆறு பேரிடம் நடத்திய விசா­ரணைக்குப் பிறகு சின்­னப்­பன் எழுதிக் கொடுத்த பத்திரப் பதிவை ரத்து செய்து அனு உத்­த­ர­விட்டார்.