முடிவுக்கு வந்தது இழுபறி; காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் தேர்வு

முடிவுக்கு வந்தது இழுபறி; காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் தேர்வு

1 mins read
c7528a00-af0f-4f92-810a-512be335ac4f
காங்­கி­ரஸ் கட்­சி­யின் தமி­ழக சட்­ட­மன்­றத் தலை­வ­ர் கு.செல்­வப்­ பெ­ருந்தகை, வலது: துணைத் தலை­வர் எஸ்.ராஜேஷ்­கு­மார்.படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

திருப்­பெ­ரும்­பு­தூர்: நீண்ட இழு­ப­றிக்­குப் பிறகு காங்­கி­ரஸ் கட்­சி­யின் தமி­ழக சட்­ட­மன்­றத் தலை­வ­ராக திருப்­பெ­ரும்­பு­தூர் தொகுதி எம்­எல்ஏ கு.செல்­வப்­பெ­ருந்­தகை நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

மூத்­த­வர்­கள் என்ற முறை­யில் பல­ரும் அந்­தப் பத­விக்குப் போட்டி யிட்­டதே இத்தாம­தத்­திற்கு காரணம் என்­றும் சொல்­லப்­பட்டது.

கடந்த ஏப்­ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திமுக அமோக வெற்றியைப் பெற்று 10 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ஆட்சி அமைத்­துள்­ளது.

இந்தக் கூட்­ட­ணி­யில் இடம்பெற்­றி­ருந்த காங்­கி­ரஸ் 25 தொகுதி களில் 18ல் வெற்றிபெற்றது.

அதிமுக, பாமக, பாஜக, கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சியிலும் சட்டமன்றத் தலைவர், துணைத் தலைவர், கொறடா பதவிகளை வகிப்பவர்களின் பெயர்கள் அறி விக்கப்பட்டுவிட்டன. ஆனால், காங்­கி­ரஸ் கட்சி மட்­டும் சட்டமன்றத் தலைவரைத் தேர்வு செய்யமுடியாமல் திணறி வந்­தது.

இந்நிலை­யில், ஒரு­வ­ழி­யாக இப்போது ­தலை­வ­ர், துணைத் தலை வர் நிய­ம­னம் செய்­யப்­ப­ட்டுள்­ளனர்.

இது­கு­றித்து தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கட்சித் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி விடுத்­துள்ள அறிக்­கை­யில், "அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்சித் தலை­வர் சோனியா காந்­தி­யின் ஒப்­பு­த­லோடு தமிழக சட்­ட­மன்ற காங்­கி­ரஸ் கட்சித் தலை­வ­ராக கு.செல்­வப்­பெ­ருந்­தகை எம்எல்ஏ வும் துணைத் தலை­வ­ராக எஸ்.ராஜேஷ்­கு­மார் எம்எல்ஏவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்," என்று தெரி­வித்­துள்­ளார்.

செல்வப்பெருந்தகை 2006-2011ல் சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக இருந்தார். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்ெபரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், அண்மையில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.