10 வகை காய்கறிகள் ரூ.100க்கு வீட்டிலேயே விநியோகம் தளர்வற்ற முழு ஊரடங்கு; சாலைகள் வெறிச்சோடின

10 வகை காய்கறிகள் ரூ.100க்கு வீட்டிலேயே விநியோகம் தளர்வற்ற முழு ஊரடங்கு; சாலைகள் வெறிச்சோடின

2 mins read
8faf4e9c-c2bb-499a-9349-32a070ce38bd
சென்னை மாநகர் எங்கும் 1,610 வாகனங்கள் மூலமும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2,770 வாகனங்கள் மூலமும் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் தளர்­வற்ற ஒரு­வார கால ழுழு ஊர­டங்கு உத்­த­ரவு நேற்று முதல் அம­லுக்கு வந்­தது. இந்த உத்­த­ரவை மீறி தேவை­யின்றி வெளியே சுற்று பவர்­க­ளின் வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­படும் என்று தமி­ழக காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

அத்­து­டன், இந்த வாக­னங்­கள் நீதி­மன்­றம் மூல­மா­கவே திருப்­பித் தரப்­படும் என்­றும் கூறப்பட்டுள்ளது.

மாநி­லம் முழு­வ­தும் முக்­கிய சாலை­களில் தடுப்­பு­கள் அமைத்து போலி­சார் தீவி­ர­மா­கக் கண்­காணித்து வரு­வ­தால், மக்­கள் நட­மாட்­டத்­து­டன் எப்­போ­தும் ஒரே இரைச்­சலாகவும் பர­ப­ரப்பாகவும் காணப்­படும் முக்­கிய சாலை­கள் பல­வும் நேற்று வெறிச்­சோ­டிக் காணப்­பட்­டன.

இந்­நி­லை­யில், புதி­தா­கப் பத­வி­யேற்ற திமுக அரசு மக்­க­ளுக்­குப் பல்­வேறு நலத்­திட்ட உத­வி­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது என்று குறிப்­பிட்ட முதல்­வர் மு.க. ஸ்டா­லின், "தமி­ழ­கத்­தில் கொரோனா கட்­டுக்­குள் வர­வில்லை. நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்­து­தான் அதனை ஒழிக்கவேண்­டும். ஊர­டங்கு நமது நன்­மைக்­குத்­தான் என உணர்ந்து அனை­வ­ரும் வீட்­டில் இருங்­கள்," என்று ஊர­டங்கு தொடர்­பில் வெளி­யிட்ட காணொ­ளி­யில் தெரி­வித்­துள்­ளார்.

"ஊர­டங்கு கசப்பு மருந்துதான். ஆனா­லும் அருந்­தியே ஆகவேண்­டும். அரசு உத்­த­ர­வுக்கு கட்­டுப்­பட்டு மக்­கள் வீட்­டுக்­குள்­ளேயே இருங்­கள் என கெஞ்சி கேட்­கி­றேன்," என்­றும் முதல்வர் கேட்­டுக்­கொண்­டார்.

மாநி­லத்­தின் தின­சரி காய்­கறி மற்­றும் பழங்­களின் தேவை 18,000 டன் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் 4,380 வாக­னங்­கள் மூலம் மக்­க­ளின் வீடு­க­ளுக்கே சென்று அவற்றை விநி­யோ­கிக்க ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தாகவும் அர­சின் செய்­திக்­கு­றிப்பு தெரி­வித்­தது.

மதுரை மாந­க­ராட்சி சார்­பில் நட­மா­டும் காய்­கறி விற்­பனை 125 வாக­னங்­களில் தொடங்­கி­யது.

ஒரு பையில் கத்­தரிக்­காய், வெண்­டைக்­காய், வெங்­கா­யம், தக்­காளி, தேங்­காய், அவ­ரைக்­காய், உரு­ளைக்­கி­ழங்கு, பச்சை மிள­காய், கொத்­து­மல்லி, கறி­வேப்­பிலை, புதினா என 10 வகை­யான காய்­கறி­கள் அடங்­கிய தொகுப்பு ரூ.100க்கு வீடுகளுக்கே சென்று வழங்­கப்­ப­டு­கிறது. இதற்கு மக்­கள் நல்ல வர­வேற்பு அளித்­துள்­ள­னர்.