சென்னை: மதுரையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் சண்முகப்பிரியா என்ற கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு உயிரிழந்தது போல், இப்போது சென்னையிலும் கார்த்திகா, 29, என்ற எட்டுமாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த மருத்து வர் கார்த்திகா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
அவர் உயிரிழப்பதற்கு முன்பு தனது கைபேசியில் காணொளி ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், "தயவுசெய்து கொரோனா கிருமியை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னால் இப்போது பேசக்கூட முடியவில்லை. இருப்பினும் மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகப் பேசுகிறேன். அனை வரும் முகக்கவசம் அணிந்து பாது காப்பாக இருங்கள்," என்று அறிவுறுத்தியுள்ளார்.

