'யாஸ்' புயல்: 97 மீட்புக் குழுக்கள் தயார்நிலை

'யாஸ்' புயல்: 97 மீட்புக் குழுக்கள் தயார்நிலை

1 mins read
43dd63c8-dbfa-4e0c-a201-6d1c07217ac0
-

புவ­னேஸ்­வர்: கடும் புய­லாக உரு­வெ­டுத்­துள்ள 'யாஸ்', இன்று நண்­ப­கல்­வாக்­கில் ஒடிசா மாநி­லம், பத்­ரக் மாவட்­டத்­தில் உள்ள தம்ரா துறை­மு­கம் அருகே கரை­யைக் கடக்­க­லாம் என இந்­திய வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது. அப்­போது, 150-160 கி.மீ. வேகத்­தில் காற்று வீசக்­கூ­டும்.

இதை­ய­டுத்து, ஒடி­சா­வி­லும் மேற்கு வங்­கத்­தி­லும் தாழ்­வான பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­ற­னர். மீட்­புப் பணி­க­ளுக்­காக தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யைச் சேர்ந்த 52 குழுக்­கள் ஒடி­சா­விற்­கும் 45 குழுக்­கள் மேற்கு வங்­கத்­திற்­கும் அனுப்­பப்­பட்­டுள்­ளன.

ஒடி­சா­வில் நான்கு மாவட்­டங்­களுக்­குச் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கொரோனா பேரி­டர் காலத்­தில் 'யாஸ்' புயல் பெரும் சவா­லாக உள்­ள­தாக ஒடிசா முதல்­வர் நவீன் பட்­நா­யக் தெரி­வித்­துள்­ளார்.

புய­லால் 20 மாவட்­டங்­கள் பாதிக்­கப்­ப­ட­லாம் என்­ப­தால், அதைச் சமா­ளிக்­கத் தேவை­யான எல்லா ஏற்­பா­டு­களை­யும் செய்­துள்­ள­தாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.