மும்பை: தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் எவரேனும் கொவிட்-19 தொற்றால் இறந்துவிட்டால், அந்த ஊழியரின் 60 வயது வரை, ஒவ்வொரு மாதமும் அவரது குடும்பத்திற்குச் சம்பளம் வழங்கப்படும் என்று டாடா எஃகு நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும், தங்களது முன்களப் பணியாளர் எவரேனும் கொரோனாவால் மாண்டுபோனால், பட்டம் பெறும் வரை அவரின் குழந்தைகளின் கல்விச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனாவால் இறந்தால் ஊழியரின் 60 வயது வரை சம்பளம்: டாடா நிறுவனம் அறிவிப்பு
1 mins read
-

