லட்சத்தீவு போராட்டம்: ஆதரவு வலுக்கிறது

லட்சத்தீவு போராட்டம்: ஆதரவு வலுக்கிறது

1 mins read
1e44d5dd-83de-4f92-995a-6c8b02c58b2a
-

கவரட்டி: இந்திய ஒன்றியப் பகுதியான லட்சத்தீவில் வாழும் 65,000 பேரில் முஸ்லிம்கள் 96 விழுக்காட்டினர். இந்நிலையில், அப்பகுதியின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல், மாட்டுக்கறிக்குத் தடை, மது விற்க அனுமதி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது மக்களை வெகுண்டெழச் செய்துள்ளது. இதையடுத்து, அந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற வேண்டும், பிரஃபுல் பட்டேலை மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் அவர்கள் போராடி வருகின்றனர். அதற்கு, நடிகர் பிரித்விராஜ், எழுத்தாளர்கள் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.