சென்னை: ஒடிசாவில் வீசிய யாஸ் புயலின் பாதிப்பு காரணமாக, சென்னையில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னைவாசிகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவோ, இருசக்கர வாக னங்களில் செல்லவோ வேண்டாம் எனவும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, வெப்பச்சலனம் காரணமாக தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட் டத்தில் இடைவிடாது பெய்த மழையால், பல இடங்களில் வீடுகள் இடிந்தன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், வடதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு சூரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி. மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

