சென்னை: நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, ரொட்டி, மளிகைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தளர்வற்ற முழு ஊரடங்கின் போது பால், காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்குத் தடையின்றி கிடைப்ப தில் எந்த சுணக்கமும் ேநராமல் பார்த்துக்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அத்துடன், நகரங்களைப் போன்று கிராமங்களிலும் காய்கறி வாகனங்கள் மூலம் காய்கறிகளை விநியோகிக்கவும் அதிகாரிகளிடம் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் நடமாடும் காய்கறி வாகனங்களின் எண்ணிக்கை 13,096 ஆக அதி கரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், இந்த வாகனங்களில் முட்டை, ரொட்டி, மளிகைப் பொருள் களை விற்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

