10 வாகனங்களில் 18 மாவட்டங்களுக்கு கொடியசைத்து அனுப்பி வைத்த முதல்வர் சிங்கப்பூரில் இருந்து 1,400 உயிர்வாயு உருளை இறக்குமதி

10 வாகனங்களில் 18 மாவட்டங்களுக்கு கொடியசைத்து அனுப்பி வைத்த முதல்வர் சிங்கப்பூரில் இருந்து 1,400 உயிர்வாயு உருளை இறக்குமதி

2 mins read
4bf45f53-2053-4b37-b81f-c7da1271bed6
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 18 மாவட்டங்களுக்கு உயிர்வாயு உருளைகளைக் கொண்டு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: டுவிட்டர் -

சென்னை: சிங்­கப்­பூ­ரில் இருந்து இறக்­கு­மதி செய்த 1,400 உயிர்­வாயு உரு­ளை­கள் மற்­றும் மருத்­துவ உப கர­ணங்­களை பல்­வேறு மாவட்­டங் களுக்­கு நேற்று முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அனுப்­பி­வைத்­தார்.

இந்த எரி­வாயு உரு­ளை­கள் விசா­கப்­பட்­டி­னத்­திற்கு முத­லில் கொண்டு வரப்­பட்டு, அங்­கி­ருந்து சாலை­மார்க்­க­மாக சென்னை தலை மைச் செய­ல­கம் வந்து சேர்ந்­தன.

அதன்­பின்­னர், இந்த 1,400 உயிர்­வாயு உரு­ளை­களும் 10 வாகனங்­கள் மூலம் 18 மாவட்­டங்களுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன.

அதன்­படி கரூர், தரு­ம­புரி, நீல­கிரி, நாமக்­கல், நாகை, திருவா ரூர், தேனி, திண்­டுக்­கல், கன்­னியா குமரி, ராம­நா­த­பு­ரம், விரு­து­ந­கர், திருப்­பத்­தூர், கள்­ளக்­கு­றிச்சி, விழுப்­பு­ரம் ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு தலா 75 உயிர்­வாயு உரு­ளை­களும் சிவ­கங்கை, திரு­வண்­ணா­மலை, கட­லூர் மாவட்­டத்­திற்கு தலா 100 உரு­ளை­களும் ராணிப்­பேட்டை மாவட்­டத்­திற்கு 50 உரு­ளை­களும் என ஆக­மொத்­தம் 1,400 உயிர்­வாயு உரு­ளை­களும் இவற்றை முறைப் படுத்­தும் கரு­வி­களும் கொரோனா சிகிச்சை பயன்­பாட்­டிற்­காக வாகனங்­களில் அனுப்­பி­வைக்­கப்­பட்­டன.

கிருமிப் பர­வல் பாதிப்­புக்­கேற்ப, கொரோனா நோயா­ளி­கள் அதி­கம் உள்ள மாவட்­டங்­க­ளின் தேவைக் கேற்ப இந்த உயிர்­வாயு உருளைகள் அனுப்பி வைக்­கப்­பட்­டன.

அதிக பாதிப்­புள்ள மாவட்­டங் களுக்கு அதி­க­மா­க­வும் குறைந்த பாதிப்­புள்ள மாவட்­டங்­க­ளுக்கு குறை­வா­க­வும் இந்த உயிர்­வாயு உரு­ளை­கள் அனுப்­பப்­பட்­ட­தாக நியூஸ் 18 தொலைக்­காட்சி செய்தி தெரி­வித்­­தது.

சிப்­காட் நிறு­வ­னத்­தின் மூலம் சிங்­கப்­பூர், மத்­தி­யக் கிழக்கு நாடு­கள், துபா­யில் இருந்து 1,915 உயிர்­வாயு உரு­ளை­கள், 2,380 உயிர்­வாயு செறி­வூட்­டி­கள், 3,250 மருத்­துவ உயிர்­வாயு அள­வீட்­டுக் கரு­வி­கள் உள்­ளிட்ட அனைத்­தும் மொத்தம் 40.71 கோடி ரூபாய் அள­விற்கு இறக்­கு­மதி செய்ய தமி­ழக அரசு ஆணை பிறப்­பித்­திருந்ததாக தமிழக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.