கிருமி பாதிப்பற்ற கிராமம்; மக்களைக் காக்கும் மூலிகைச் சாறு

கிருமி பாதிப்பற்ற கிராமம்; மக்களைக் காக்கும் மூலிகைச் சாறு

2 mins read
3719195c-7ad9-477c-83a9-130652777130
இளைஞர்கள் தயாரித்துள்ள மூலிகைச் சாறை அருந்தவும் தங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்கிச் செல்ல கையில் பாத்திரங்களுட னும் வந்து அமர்ந்துள்ள கானூர் மக்கள். படம்: தமிழக ஊடகம் -

சிவகங்கை: கானூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் கிராம மக்களை கொரோனா கிருமி பாதிப்புக்கு ஆளாகிவிடாமல் கண்காணித்து வருகின்றனர்.

இளைஞர்கள் காட்டும் அக்கறை காரணமாக, 500 குடும்பத்தினர் வாழும் கானூர், கிருமி பாதிப்பற்ற கிராமமாகத் திகழ்கிறது.

இதற்கு, இங்குள்ள இளைஞர் கள் தயாரித்து வழங்கும் மூலிகைச் சாறே காரணம் என்றும் கூறப்படு கிறது.

சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகில் உள்ளது கானூர் கிராமம். கொரோனா முதல் அலையின்போது கானூர் மக்களிடம் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டு விடாதபடி இந்த இளைஞர்கள் பார்த்துக்கொண்டனர்.

அதேபோன்று இரண்டாம் அலையின் தாக்கம் உச்சத்தில் உள்ள இந்த நேரத்திலும் தங்களது கிராமத்தில் யாருக்கும் கிருமித் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்.

நோய் எதிர்ப்புச் சக்தியை எந்த வகையான உணவுகளின் மூலம் அதிகப்படுத்தலாம் என்பது குறித்த தகவல்களை தங்களது கிராம மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

கபசுர குடிநீர், முருங்கை இலை சூப், வாழைத்தண்டு சூப், காளான் சூப், முளைகட்டிய பயிறு வகைகள், வேர்க்கடலை என பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் 'உண்மை உழைப்பு உயர்வு' என்ற வாட்ஸ்அப் குழுவின் இளைஞர் உறுப்பினர்கள் வழங்கி வருகின்றனர்.

அதிகாலை 4 மணிக்கே மூலிகை சூப், கடலை வகைகளை தயார் செய்யும் பணி தொடங்கப் பட்டு, 7 மணிக்குள் மொத்த கிராம மக்களுக்கும் அவை விநியோகம் செய்யப்படுகின்றன.

சென்னையில் சமையல் கலை ஞராகப் பணிபுரிந்து வந்த பொன் முத்துராமலிங்கம் என்பவர், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான கானூருக்கே திரும்பினார். அவரின் கைப்பக்கு வத்தில்தான் இந்த சத்தான சாறு கள் விநியோகிக்கப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தமிழக அரசு ஒரு பக்கம் துரிதப்படுத்தி வரும் நிலையில், கானூர் இளைஞர்கள் தங்களது கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.