வெளியூர் மக்களுக்கு அனுமதி மறுப்பு

வெளியூர் மக்களுக்கு அனுமதி மறுப்பு

1 mins read
1dd4d40d-8879-4206-95dd-63af58f15a6f
ராவத்தூர் கிராமத்தில் வைக்கப் பட்டுள்ள அறிவிப்பு பதாகை.படம்: தமிழக ஊடகம் -

கோவை: கொரோனா கிரு­மிப் பரவலைத் தடுக்­கும் வகையில், "வெளியூரைச் சேர்ந்தோருக்கு எங்கள் ஊருக்­குள் நுழைய அனு­மதி இல்லை," என்று ராவத்­தூர் மக்கள் அறிவிப்புப் பதாகைகளை கட்டி வைத்துள்ளனர்.

சென்­னை­யை அடுத்து கோவை மாவட்­டத்­தி­லும் கிரு­மிப் பர­வல் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. தினமும் பாதிப்பு 4,000 பேரைக் கடந்­துள்ள நிலை­யில், உயி­ரி­ழப்­பும் அதிகரித்து வரு­கிறது.

இந்நிலையில், சூலூர் அருகில் உள்ள ராவத்­தூர் கிராம மக்­களும் தொற்­றின் தீவிரத்தை உணர்ந்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்து வருகின்றனர்.

இங்குள்ள கலை­ஞர் நகர் குடி­யி­ருப்­பில் 150க்கும் மேற்­பட்ட குடும்­பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் யாரும் இதுவரை தொற்றால் பாதிக்கப்படவில்லை.

இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் வகையில், கிரா­மத்­தி­னர் வெளி­யூருக்குச் சென்று வர கடும் கட்­டுப்­பா­டு­களை விதித்துள்­ள­னர். அதேபோல், வெளியூரைச் சேர்ந்த வர்கள் தங்கள் ஊருக்குள் வரவும் தடை விதித்துள்ளனர்.

இது­கு­றித்த அறி­விப்பை கிரா­மத்­தின் நுழைவாயி­லில் வைத்­துள்ள மக்­கள், 24 மணி­நே­ர­மும் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். அதை­யும் மீறி கிரா­மத்­திற்­குள் நுழை­ப­வர்­களை எல்­லை­யி­லேயே விசா­ரித்து திருப்பி அனுப்­பி­ வி­டு­கின்­ற­னர்.