பாதிப்பு குறைந்தது; இறப்பு இருமடங்கானது

பாதிப்பு குறைந்தது; இறப்பு இருமடங்கானது

1 mins read
b85bb4a2-3df2-4696-bfb0-5697a943a1b1
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா இறப்பு விகி­தத்தின் தாக்கம் முதல் அலை­யில் இருந்­ததைவிடவும் இப்போதைய இரண்டாம் அலையில் இரு மடங்­காக அதிகரித்­துள்­ள­தாக மருத்துவ வல்­லு­நா்­கள் தெரி­வித்­துள்­ளனா்.

கடந்த 11 நாள்­களில் மட்­டும் 4,284 போ் உயி­ரி­ழந்­தது அதற்கு சான்­றா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது.

கொரோனா முதல் அலை­யில் தமி­ழ­கத்­தின் இறப்பு விகி­தம் 0.8% ஆகவும் தற்­போது 1.5%ஆகவும் அதி­க­ரித்­துள்­ளது. அதன்­படி கணக்­கிட்­டால், இரண்­டாம் அலை­யில் ஏறத்­தாழ இருமடங்கு இறப்பு விகி­தம் பதி­வா­கி­யுள்­ளது.

கடந்த ஆண்டு மே 25ஆம் தேதியன்று மாநி­லத்­தில் இறப்பு எண்­ணிக்கை 10 என்ற எண்ணிக் கையில்தான் இருந்­தது. ஓராண்­டுக்­குப் பிறகு நேற்று முன்தினம் மே 25ல் அந்த எண்­ணிக்கை 468ஆக உயா்ந்­துள்­ளது.

இரண்­டாம் அலை தொடங்­கிய கடந்த ஏப்­ரல் மாதத்­தில் இருந்து தற்­போது வரை ஏறத்­தாழ 8,000 போ் கொரோ­னா­வுக்கு பலி­யா­கி­யி­ருப்­ப­தாக சுகா­தா­ரத் துறைத் தக­வல்­களும் தெரி­வித்­துள்­ளன. அதில் பெரும்­பா­லானோா் 45 வய­துக்­குட்பட்­ட­வா்­கள், எந்த இணை நோயும் இல்­லா­த­வா்­கள் என்­ப­தும் அதிர்ச்­சிக்­கு­ரிய தகவல்.

இறப்பு விகி­தத்­தைக் கட்­டுப்­படுத்த கடந்த முறை பின்­பற்­றி­ய­தைப் போன்றே சிறப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்டு, சிகிச்சை முறை­களை மேம்­ப­டுத்த வேண்­டும் என்­றும் கோரிக்கை எழுந்­துள்­ளது.

கொரோனா கிரு­மி­யா­னது, இரண்­டாம் அலை­யில் வீரியமிக்­க­தாக உரு­மா­றி­யுள்­ளது. அதன் விளை­வா­கவே இறப்­போ­ரின் எண்­ணிக்­கை­யும் உயா்ந்­துள்­ளது.

சிகிச்சை பல­னின்றி இறந்­த­வா்­கள் ஒரு­பக்­கம் என்­றால், மற்றொரு பக்­கம் உரிய நேரத்­தில் சிகிச்சை கிடைக்­கா­ம­லும் பலா் உயி­ரி­ழந்­துள்­ளனர்.