முதல்முறையாக கோவையில் அதிக பாதிப்பு

முதல்முறையாக கோவையில் அதிக பாதிப்பு

1 mins read
882370f9-3d01-43aa-a5f2-ab2c704825dc
-

கோவை: தமிழகத்தில் மட்டுமின்றி தலைநகர் சென்னையிலும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று மட்டுப்பட ஆரம்பித்துள்ளது. இருப்பினும், சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் இத்தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்முறை யாக சென்னையைவிட கோவையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி யானது. 475 பேர் இத்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கோவையில் (4,268), சென்னையில் (3,561), திருப்பூரில் (1,880), திருச்சியில் (1,755), ஈரோட்டில் (1,642) பேருக்கும் புதிதாக கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.