அமைச்சர்: மருத்துவமனையில் தீ விபத்து; புகையால் பாதிக்கப்பட்ட சிசுக்களுக்கு சிகிச்சை 47 குழந்தைகள் மீட்பு

அமைச்சர்: மருத்துவமனையில் தீ விபத்து; புகையால் பாதிக்கப்பட்ட சிசுக்களுக்கு சிகிச்சை 47 குழந்தைகள் மீட்பு

2 mins read
3ee10440-dc83-4006-9182-d35a960629f5
கஸ்­தூ­ரி­பாய் காந்தி தாய்-சேய் நல மருத்­து­வ­ம­னை­யின் இரண்­டா­வது தளத்­தில் தீ மூண்டு, கரும்புகை சூழ்ந்ததை அடுத்து, மகப்பேறு வார்டில் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்களை அவர்களது கைக்குழந்தை களுடன் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். படம்: ஊடகம் -

சென்னை: சென்னை திரு­வல்­லிக் கேணி அரசு மகப்­பேறு மருத்­துவ மனை­யில் திடீ­ரென்று ஏற்­பட்ட தீ விபத்­தின்­ காரணமாக, அங்­கி­ருந்த 47 குழந்­தை­களும் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­ட­தாக இந்து சமய அற நிலை­யத்­துறை அமைச்­சர் சேகர் பாபு தெரி­வித்தார்.

அத்துடன், புகை மூட்­டத்­தால் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­ வும் அவர் மேலும் கூறி­னார்.

திரு­வல்­லிக்­கே­ணி­யில் உள்ள கஸ்­தூ­ரி­பாய் காந்தி தாய்-சேய் நல மருத்­து­வ­ம­னை­யின் இரண்­டா­வது தளத்­தில் மகப்­பேறு வார்டு செயல்­பட்டு வரு­கிறது.

இந்த வார்டில் பிர­ச­வித்த தாய்­மார்­கள் தங்­களது குழந்­தை­க­ளு­டன் சிகிச்சை பெற்று வந்­த­போது, நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு நேரத்­தில் அங்கிருந்த மருத்­து­வர்­கள் தங்­கும் அறை­யில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதை­ய­டுத்து, சிறிது நேரத்­தில் கரும்புகை கார­ண­மாக மூச்­சுத் திண­ற­ல் ஏற்­ப­டத் தொடங்கிய நிலை­யில், மருத்­து­வ­மனை ஊழி யர்­களும் தாதிகளும் துரிதகதியில் செயல்பட்டு தாய்­மார்­க­ளை­யும் குழந்தைகளையும் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு மாற்றி­னர்.

இது­கு­றித்து தீய­ணைப்பு நிலை­யத்­துக்கும் தக­வல் கூறப்பட்டது.

இதற்­கி­டையே, அமைச்­சர் பி.கே.சேகர்­பா­பு­வும் சேப்­பாக்­கம்-திரு­வல்­லிக்­கேணி தொகுதி எம்­எல்ஏ உத­ய­நிதி ஸ்டா­லி­னும் சம் பவ இடத்தைப் பார்வையிட்டு, தாய்­மார்­க­ளுக்கு ஆறு­தல் கூறி­னர்.

இது­கு­றித்து, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் சேகர்­பாபு பேசி­ய­போது, "மருத்­து­வ­ம­னை­யின் இரண்­டா­வது தளத்­தில் மருத்­து­வர்­கள் தங்­கி­யி­ருக்­கும் அறை­யின் குளிர்­சா­த­னப் பெட்­டி­யில் மின் கசிவு ஏற்­பட்டு, தீ விபத்து ஏற்­பட்­டுள்­ளது.

"இதன் காரணமாக, குழந்­தை­கள் அவ­சர சிகிச்­சைப் பிரி­வி­லும் புகை­மூட்­டம் பரவி உள்­ளது. மருத்­துவமனை­யில் சிகிச்சை பெற்று வந்த 47 குழந்­தை­களும் பாது­காப்­பாக வேறு வார்டுகளுக்கு மாற்­றப்­பட்­ட­னர். தற்­போது புகை மூட்­டத்­தால் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

"இந்த மருத்­து­வ­ம­னை­யில் உள்ள அனைத்­துப் பகு­தி­களும் உட­ன­டி­யாக பழுது பார்க்­க உத்­த­ர­வி­டப்­படும். எதிர்­காலத்­தில் இது­போன்ற விபத்­து­கள் நிக­ழாத வகை­யில் உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்," என்று தெரி­வித்­தார்.