சாலையோரம் தங்குபவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்க ஏற்பாடு

சாலையோரம் தங்குபவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்க ஏற்பாடு

1 mins read
69498710-4b3d-4585-9fb9-3a4550481f83
-

கொரோனா கிருமிப் பரவல் சங்கிலியை உடைப்பதற்காக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக எந்தக் கடைகளும் திறக்கப்பட மாட்டாது என அரசு கூறிவிட்டதை அடுத்து, சாலையோரம் தங்கி இருப்பவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சமூக சமையலறையில் உணவைத் தயாரித்து, அதைப் பொட்டலமாகப் போட்டு உணவு தேவைப்படு வோருக்கும் சம்பளமின்றி சிரமப்பட்டு வரும் தினக்கூலி ஊழியர்களுக்கும் தொண்டூழியர்கள் வழங்கி வழங்குகின்றனர். அதன்படி, நூற்றுக்கணக்கானோருக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. படம்: ஏஎஃப்பி