சென்னை: சொந்த வீடு என்று எதுவும் இல்லாமல் சாலையோரம் வசித்து வரும் மக்களுக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அடையாள அட்டைகள் எதுவும் இல்லாத, வீடில்லாத மக்களைக் கருத்தில் கொண்டு முருகானந்தம் என்ற வழக்கறிஞர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், வீடின்றி சாலையோரம் வசிக்கும் மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவோ, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவோ முடியாத நிலையில், தடுப்பூசி போட்டால்தான் அவர்களின் உயிரைப் பாதுகாக்க முடியும் என்ற சூழல் உள்ளதால் அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து, வீடில்லாத மக்களைக் கணக்கெடுத்து, அவர் களுக்கும் தடுப்பூசி போட நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

