பாலியல் புகார்: மேலும் ஓர் ஆசிரியர் பணியிடை நீக்கம்

பாலியல் புகார்: மேலும் ஓர் ஆசிரியர் பணியிடை நீக்கம்

2 mins read
5dcf71f0-bf2e-46bc-aacf-56df28bc98cf
-

சென்னை: சென்­னை­யில் பாலி­யல் புகார் தொடர்­பில் மற்­றொரு ஆசி­ரி­யரை பள்ளி நிர்­வா­கம் பணி இடை­நீக்­கம் செய்­துள்­ளது.

சென்­னை­யில் அடுத்­த­டுத்து ஆசி­ரி­யர்­கள் பாலி­யல் குற்­றச்­சாட்­டுக்கு ஆளாகி வரு­வ­தும் அவர்­கள் மீது நட­வ­டிக்­கை­கள் எடுக்கப்­பட்டு வரு­வ­தும் பெற்­றோ­ரிடையே ஒரு­வித அச்­சத்­தை­யும் அதிர்ச்­சி­யை­யும் ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அண்­மை­யில், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசி­ரி­யர் ஒரு­வர் பாலி­யல் புகார் தொடர்­பில் கைதானார்.

மக்­கள் மத்­தி­யில் இந்த விவ காரம் குறித்த பர­ப­ரப்பு அடங்கு வதற்­குள் மற்­றொரு ஆசி­ரி­ய­ரும் பாலி­யல் புகா­ரில் சிக்­கி­யுள்­ளார்.

சென்னை அய­னா­வ­ரத்­தில் மக­ரிஷி வித்யா மந்­திர் பள்­ளி­யில் 11 மற்­றும் 12ஆம் வகுப்பு மாண­வர் களுக்கு வணி­க­வி­யல் பாடத்தை ஆசி­ரி­யர் ஆனந்­தன் போதித்து வந்­தார்.

இந்­நி­லை­யில், அவர் தனக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்­த­தாக அந்­தப் பள்­ளி­யில் படித்த முன்­னாள் மாணவி ஒரு­வர் சமூக வலைத்­தளத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.

இந்த விவ­கா­ரம் குறித்து அந்­தப் பள்­ளி­யின் குழு ஒன்று நடத்­திய விசா­ர­ணை­யில், மாணவி கூறிய புகார் உண்மை என தெரி­ய­வந்­ததை அடுத்து, ஆசி­ரி­யர் ஆனந்­தனை பள்ளி நிர்­வா­கம் பணி­யிடை நீக்­கம் செய்­துள்­ளது.

அத்­து­டன், இது­கு­றித்து காவல்­து­றை­யில் புகார் அளிக்க உள்ள தாக­வும் கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, பாலி­யல் புகார் தொடர்­பில் சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசி­ரி­யர் ராஜ­கோ­பா­லனை ஐந்து நாட்­கள் காவ­லில் எடுத்து விசா­ரிக்க காவல்­துறை முடிவு செய்­துள்­ளது.

இணைய வகுப்­பில் மாண­வி­க­ளி­டம் பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்ட வணி­க­வி­யல் ஆசி­ரி­யர் ராஜ­கோ­பா­லன், 59, கைது செய்­யப்­பட்டு, ஜூன் 8ஆம் தேதி வரை 15 நாட்­க­ளுக்கு நீதி­மன்­றக் காவ­லில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்.

நடி­கர் ஒய்.ஜி.மகேந்­தி­ர­னின் தாயார் ஒய்.ஜி.பார்த்­த­சா­ர­தி­யால் நிறு­வப்­பட்­டது பத்ம சேஷாத்ரி பள்ளி.

"சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யர் மீது தவறு இருந்­தால் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். எனது தாயார் உரு­வாக்­கிய பள்­ளிக்கு எந்­த­வி­த­மான தவ­றான பெய­ரும் ஏற்­ப­டாத வகை­யில் பள்ளி நிர்­வா­கம் நடந்து கொள்­ள­வேண்­டும்," என்று பள்ளி நிர்­வா­கத்தை ஒய்.ஜி.மகேந்­தி­ரன் வலியுறுத்தியது குறிப்­பி­டத்­தக்­கது.