இரண்டாவது அலையில் இறப்பு எண்ணிக்கை அதிகம்

இரண்டாவது அலையில் இறப்பு எண்ணிக்கை அதிகம்

2 mins read
167425b8-0f9d-46eb-93e1-d6ed1953d009
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா முதல் அலை­யைக் காட்­டி­லும் இப்­போ­தைய இரண்­டாம் அலை கார­ண­மாக இறப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து வருகிறது. மாநி­லம் முழு­வ­தும் கடந்த வியா ழனன்று மட்­டும் கிருமி பாதிப்­பால் 474 பேர் இறந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தி­லும் தலை­ந­கர் சென்­னை­யி­லும் கிருமி பாதிப்­பால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை குறைந்து வரும் நிலை­யில், இறப்­பவர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது மக்­களைக் கவலை கொள்­ளச் செய்­துள்­ளது.

மாநி­லத்­தில் கடந்த புத­னன்று கிருமி பாதிப்­பால் பாதிக்­கப்பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 33,764 ஆக இருந்த நிலை­யில், வியா­ழ­னன்று இந்த எண்­ணிக்கை 33,361ஆக மேலும் குறைந்­தது.

சென்­னை­யி­லும் இந்­தப் பாதிப்பு குறை­யத் தொடங்கியுள்­ளது.

எனினும், தொடர்ந்து இரண்டா வது நாளாக சென்னையை விட­வும் கோவை­யில் அதி­க­மா­னோர் கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்டி ருப்­பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேற்கு மாவட்­ட­மான கோவை யில் 4,734 பேருக்கு தொற்று உறுதி யானது. இது சென்­னை­யில் பதி வான 2,779 பேரை விட­வும் ஏறத் தாழ இரு மடங்கு அதி­க­மா­கும்.

இம்­மா­தம் 10ஆம் தேதி முதல் கோவை­யில் தொற்று எண்­ணிக்கை வேக­மெ­டுத்து வரு­கிறது.

கோவை­யில் 37,488 பேர் சிகிச்­சை­யில் உள்­ள­னர். இது­வரை 1,135 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இதற்கிடையே, கொரோனா கிரு­மி­யா­னது இரண்­டாம் அலை­யில் வீரி­ய­மிக்­க­தாக உரு­மா­றி­யுள்­ளது. அதன் விளை­வா­கவே இறப்­போ ரின் எண்ணிக்­கையும் உயா்ந்­துள்ள தாக மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி வித்துள்­ளனா்.

சிகிச்சை பல­னின்றி இறந்­தவர் ­கள் ஒரு­பக்­கம் என்­றால், மற்­றொரு பக்­கம் உரிய நேரத்­தில் சிகிச்சை கிடைக்­கா­ம­லும் பலா் உயி­ரி­ழந் துள்­ளதாகக் கூறப்படுகிறது.

தமி­ழ­கத்­தில் கடந்த சில நாள் களாகவே கொரோ­னா­வால் இறப்ப வர்­களில் எந்த இணை­நோ­யும் இல்­லா­மல் இறப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கையும் அதி­க­மா­கி­யுள்ளதாக­அதிர்ச்­சி­யூட்­டும் தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

நோயா­ளி­கள் உரிய நேரத்­தில் மருத்­துவ சிகிச்சை பெறா­தது, மருத்­து­வ­ம­னை­களில் படுக்கை வச­தி­கள் இல்­லா­தது, தகுந்த மருந்­து­கள் கிடைக்­கா­தது ஆகி­ய­வற்றை உயிரிழப்புக்கான கார­ணங்­க­ளாக மருத்­து­வத்­துறை வட்­டா­ரங்­கள் கூறி­யுள்­ளன.

கடந்த 24 மணி நேரத்­தில் மட்டும் அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 79, செங்­கல்­பட்­டில் 52, திருப்­பூ­ரில் 34, கோவை­யில் 32, சேலத்­தில் 30 பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.