சென்னை: கிருமி பாதிப்பு காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை யும் உணவை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைவருக்கும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், இப்போது வீட்டிலிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கும் இலவசமாக உணவு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இத்திட்டம் குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "வீட்டுத் தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு என்றே உணவு தயாரிப்பதற்காக தனியாக சமையல் கூடத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"அங்கு தயாரிக்கப்படும் உணவை 100 களப்பணியாளர்கள் வீடு தேடிச் சென்று விநியோகிப் பார்கள். காலையில் இட்லி, பொங் கல், கிச்சடியும் மதியம் சாப்பாடு, இரவு 'டிபன்' என மூன்று வேளையும் இலவசமாக வழங்கப்படும்.
"இந்த மனிதநேய உதவி கொரோனா கட்டுப்படும் வரை தொடரும்," என்றார் அமைச்சர்.

