மதுரை: கொரோனா நோய் கட்டுப்படுவதற்கான ஒரே மருந்து பாம்புதான் எனக் கூறி, அதனை கடித்துத் தின்ற ஆடவருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவர், வயல்வெளியில் ஓடிய பாம்பு ஒன்றை உயிருடன் பிடித்து, கொரோனா நோய்க்கு இது அரிய மருந்து என கூறிக் கொண்டே அதனை கடித்து உண்ணுகிறார்.
இந்தக் காெணாளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, வனத்துறையினர் ஆடவருக்கு ரூ.7,500 அபரா தம் வசூலித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

