ஈரோடு: ஈரோட்டில் இந்து, முஸ் லிம், கிறிஸ்துவர்கள் தங்களது மத நல்லிணக்கப் பண்பு காரண மாக மற்றவர்களுக்கு முன்னு தாரணமாகி உள்ளனர்.
கிறிஸ்துவ முதியோர் இல்லத் தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த இந்து மூதாட்டிக்கு முஸ்லிம் அன்பர்கள் இறுதிச்சடங்கு செய்து மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், திண்டலில் 'லிட்டில் சிஸ்டர்ஸ்' கிறிஸ்துவ முதியோர் இல்லத்துக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் 'மக்கள்' ராஜன் தினமும் உணவு வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் 'மக்கள்' ராஜன் உணவு வழங்கச்சென்றபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்டாள், 75, இறந்து காணப் பட்டார். உறவினர்கள் இல்லாததால் அவரது உடலை இந்து மதப்படி எரியூட்டும்படி இல்ல நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்த பாட்ஷா, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் லுக்மான் ஆகியோரின் உதவியுடன் மின் மயானத்தில் சடங்குகள் செய்து, மூதாட்டியின் உடல் எரியூட்டப்பட்டது.
இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்டாளை, அவரது இறுதிக்காலம் வரை கிறிஸ்துவ சகோதரிகள் பராமரித்தனர். அவரது இறுதி நிகழ்வு, சடங்குகளை முஸ்லிம் சகோதரர்கள் செய்தனர். இதர ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் 'மக்கள்' ராஜன்

