பாதிப்பு சரிந்தது; குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு

பாதிப்பு சரிந்தது; குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு

1 mins read
d5d67573-d0da-4ffb-9d0f-1abf61f17fa9
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை ஒரு­பு­றம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மற்­றொரு புறம் குணம் அடை­வோரின் எண்ணிக்கை அதி­க­ரித்து வருவது தெரியவந்துள்ளது.

இருப்­பி­னும், தொடர்ந்து மூன்­றா­வது நாளாக மேற்கு மாவட்­ட­மான கோயம்­புத்­தூ­ரில் பாதிப்பு அதிகள­வில் பதி­வாகி உள்­ளது.

தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் மேலும் 31,079 பேருக்கு தொற்று உறு­தி­யா­னது. இவர்­களில் 2,762 பேர் சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள். கோவை­யில் (3,937), திருப்­பூ­ரில் (1,823), ஈரோட்­டில் (1,731), திருச்­சி­யில் (1,287), மது­ரை­யில் (1,140), கன்­னி­யா­கு­ம­ரி­யில் (1,007) பேரும் இத்தொற்றால் புதி­தாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், கவ­லைக்­கு­ரிய விதமாக தமி­ழ­கத்­தில் ஒரே நாளில் 486 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். இதையடுத்து, மொத்த பலி எண்­ணிக்கை 22,775 ஆக உயர்ந்­துள்­ளது. ஒரே நாளில் பெருந்­தொற்­றில் இருந்து 31,255 பேர் குணம்­பெற்று, வீடு திரும்பியுள்­ள­­தாக சுகா­தா­ரத் ­துறை தெரி­வித்­துள்­ளது.