சென்னை: மாநில அரசு கொள் முதல் செய்யும் கொரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்து, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பொருள் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த வெள்ளியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 43வது பொருள் சேவை வரி மன்றக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றுப் பேசிய தமிழக நிதி யமைச்சர், "அவசரகதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பொருள் சேவை வரியின் நடைமுறையில் அடிப்படை குறைபாடு உள்ளது," என குற்றம்சாட்டினார்.
2021-22ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வரு வாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்யவேண்டும் எனவும் பொருள் சேவை வரி முறையை முற்றிலும் மாற்றியமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என வும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

