சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, மோசம் செய்து விட்டதாக 'நாடோடிகள்' திரைப்பட நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் சாந்தினி, 36, 'நாடோடிகள்' உள்பட ஐந்து தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதியிடம் சாந்தினி அளித்துள்ள மனுவில், "நான் மலேசிய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத பெண். மலேசிய நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்து வந்தபோது அடிக்கடி நான் சென்னை வரு வேன். அப்போது அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.
"என்னை விரும்புவதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.
"அவரது பேச்சை நம்பி கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். மூன்று முறை கருவையும் கலைத் துள்ளேன்.
"தற்போது திருமணம் செய்யு மாறு கேட்டால், என் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு விடுவதாக பயமுறுத்து கிறார்.
"அவர் மீது சட்டபூர்வ நட வடிக்கை எடுத்து, எனது புகைப் படங்களை மீட்டுத்தர வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 18 ஊடகம் மணிகண்டனைத் தொடர்பு கொண்டபோது, "மூன்று வருடங்களாக அமைச்சராக இருந்துள்ளேன். என் மீது ஒரு சிறிய புகார்கூட கிடையாது.
"ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ஆட்சியெல்லாம் முடிந்த பின்னர் இப்படி வந்து மிரட்டுகிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது பேசியிருந்தால்கூட என்னவென்று கேட்டிருக்கலாம். யாரோ பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இருந்து கொண்டு இந்தச் சதி வேலையில் இறங்கியுள்ளது," எனக் கூறியுள்ளார்.

