400 பேருக்கு கறுப்புப் பூஞ்சை பாதிப்பு; 13 பேர் குழு அமைப்பு

400 பேருக்கு கறுப்புப் பூஞ்சை பாதிப்பு; 13 பேர் குழு அமைப்பு

2 mins read
16e0f55c-ae50-44c8-8180-b959d286ee7b
-

சென்னை: 'மியூ­கோர்­மை­கோ­சிஸ்' என அழைக்­கப்­படும் கறுப்­புப் பூஞ்சை நோய் கார­ண­மாக இது­வரை ஏறக்­கு­றைய 400 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­தாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ெதரிவித்துள்ளார்.

இந்த 400 பேரில் அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 111 பேரும் அதற்கு அடுத்­த­ப­டி­யாக வேலூ­ரில் 74 பேரும் கோவை­யில் 43 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனா்.

இதன் கார­ண­மாக அரசு, தனி யாா் மருத்­து­வ­ம­னை­களில் அதற்­கென தனி வாா்டுகளை அமைக்­க­வும் உத்­த­ர­வி­டப்பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் கறுப்­புப் பூஞ்சை நோயைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் இந்­நோய் குறித்து அர­சுக்கு ஆலோ­ச­னை­களை வழங்­க­வும் 13 போ் கொண்ட மருத்­து­வக் குழுவை மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைத்­துள்­ளது.

இதுகுறித்து மருத்­து­வக் கல்வி இயக்­கு­நர் டாக்டர் நாராயண­பாபு, டாக்டர் மோகன் காமேஷ்வர் ஆகியோர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசியபோது, "தமி­ழ­கத்­தில் கறுப்­புப் பூஞ்சை நோயால் 400 போ் பாதிக்­கப்­பட்­டுள்­ளனா். அதில் ஒருவா் உயி­ரி­ழந்­துள்ளாா். அவ­ரது இறப்­புக்­குக்கூட நுரை­யீ­ரல் பாதிப்பே கார­ணம் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

"கறுப்­புப் பூஞ்சை நோயா­ளி­களுக்­குத் தேவை­யான மருந்­து­கள் அரசு மருத்­துவமனைகளில் தாரா­ள­மா­கக் கிடைக்கின்றன.

"மூக்­கில் இருந்து கறுப்பு நிறத்­தில் திர­வம் அல்­லது ரத்­தம் வெளி­யே­றி­னால் இது கறுப்­புப் பூஞ்சை நோயின் அறி­கு­றியாக எடுத்துக் கொள்ளலாம்," என்­று கூறிய அவர்கள், இது தொற்றும் நோய் அல்ல என்றனர்.

கறுப்புப் பூஞ்சை தாக்குவதற்கு நீண்டநாள்களாக ஊக்க மருந்து சிகிச்சை பெறுவது, நோய் எதிர்ப்புச் சக்தி மருந்தை அதிககாலம் உட்கொள்வது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காதது போன்ற சில காரணங்களும் உள் ளன என்றும் அவர்கள் கூறினர்.