புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகளைக் கையிருப்பில் வைத்துள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் இந்திய நாடெங்கும் கோவேக்சின், கொவிஷீல்ட் தடுப்பூசிகள் போடும் பணி தொடர்ந்து வருகின்றது. இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 999 தடுப்பூசி குப்பிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

