பெங்களூரு: பெங்களூரு நகரில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் கிருமித்தொற்று தடுப்பு நடவடிக்கையாக வானிலிருந்து கிருமிநாசினி திரவம் தெளிக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் 'சாம்பியன் ஸ்கௌட்' ரக சிறு விமானம் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. சனிக்
கிழமை இந்த கிருமி நாசினி தெளிப்பு விமானத்தை கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் ஆர். அசோக் தொடங்கி வைத்தார். மூன்று நாட்களுக்கு இவ்விமானம் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணியைத் தொடரும்.
இவ்விமானத்தில் 300 லிட்டர் கிருமி நாசினி நிரப்பப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் 300 ஹெக்டர் நிலப்பரப்பின் மீது கிருமி நாசினி மழையைப் பொழியும் ஆற்றல் கொண்டது இவ்விமானம். வானிலிருந்து கிருமி நாசினி தெளிக்கப்
படுவதால் மக்களுக்கு எவ்வித சுகாதாரக் குறைவும் ஏற்படாது என இப்பணியை முன்னின்று நடத்தும் ஏரோ எல்எல்பி நிறுவனத்தின் முரளி ராமகிருஷ்ணா கூறினார். படம்: இபிஏ

