தடகளப் பயிற்றுநருக்கு சிறை; 12 நாள் காவல்

தடகளப் பயிற்றுநருக்கு சிறை; 12 நாள் காவல்

2 mins read
1e0ce5f6-b520-449d-9aa0-c82717fae29a
-

சென்னை: பிர­பல தட­கள பயிற்­று­நர் நாக­ரா­ஜனை 12 நாட்­கள் விசா­ர­ணைக் காவ­லில் வைக்க உத்­தர விடப்­பட்­டுள்­ளது. இவர் மீது இரு நாட்­க­ளுக்கு முன் பாலி­யல் புகார்­கள் கொடுக்­கப்­பட்­டன. மத்­திய அர­சின் 'ஜிஎஸ்டி' வரி கண்காணிப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் இவர், 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற பெய­ரில் தட­

க­ளப் பயிற்சி மையம் நடத்தி வரு­கி­றார். அங்கு இவ­ரி­டம் வீராங்­க­னை­கள் பலர் தட­க­ளப்­ப­யிற்சி பெற்­று­வந்­த­னர். பயிற்­சி­ய­ளிக்­கும் போது வீராங்­க­னை­க­ளைப் பாலி­யல் ரீதி­யாக நாக­ரா­ஜன், 59, (படம்) சீண்டி வந்­தி­ருக்­கி­றார். பண­ப­லம் படைத்­த­வர்­களை விடுத்து ஏழைப்­பெண்­க­ளைக் குறி­வைத்து பாலி­யல் சீண்­டல் செய்து வந்த இவர், 17 வயது வரை­யி­லான சிறு­மி­க­ளைக் குறி­வைத்­தி­ருக்­கி­றார். இவ­ரி­டம் பயிற்சிபெற்ற பெண் ஒரு­வர் சென்னை பூக்­கடை காவல் நிலை­யத்­தில் பாலி­யல் புகார் அளித்­தார். 'பிசி­யோ­தெ­ரபி' பயிற்சி அளிப்­ப­தா­கக் கூறி நாக­ரா­ஜன் பாலி­யல் ரீதி­யாக துன்­பு­றுத்­து­வ­தாகவும் 20க்கு மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வும் அவர் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தார்.

புகா­ரைப் பெற்­றுக்­கொண்ட காவல் துறை­யி­னர், நாக­ரா­ஜன் மீது 'போக்சோ' உள்­ளிட்ட ஐந்து பிரி­வு­க­ளின்­கீழ் வழக்கு பதிந்­த­னர். போக்சோ சிறப்பு நீதி­மன்­றத்­தில் நேற்று நாக­ரா­ஜ­னி­டம் விசா ரணை நடத்­திய நீதி­பதி முக­மது ஃபாரூக், 12 நாள் நீதி­மன்­றக் காவல் அளித்து உத்­த­ர­விட்­ட­தைத் தொடர்ந்து நாக­ரா­ஜன் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

ராஜகோபாலன் மீது

ஆறு மாணவிகள் புகார்

சென்னை பத்ம சேஷாத்ரி பள்­ளி­யின் ஆசி­ரி­யர் ராஜ­கோ­பா­லன், மாண­வி­க­ளுக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்­த­தாக கடந்த 24ஆம் தேதி கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக் கைதி­யாக சிறை­யில் அடைக்­கப்­பட்டுள்­ளார். அண்மை யில் மேலும் இரு மாண­வி­கள் ராஜ­கோ­பா­ல­னுக்கு எதி­ரா­க புகார் கொடுத்­த­னர். இந்­நி­லை­யில், தற்­போது மேலும் மூன்று மாண­வி­கள் அவ­ருக்கு எதி­ரா­கப் பாலி­யல் புகார் கொடுத்­துள்­ள­னர். இது­ வரை ஆறு மாண­வி­கள் புகார் அளித்­துள்­ள­தால் விசா­ரணை தீவி­ரம் அடைந்து வரு­கிறது.

பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் சீண்டல்