கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று மேற்பார்வையிட்டார். கோவை இஎஸ்ஐ மருத்துவ
மனையில் கொரோனா நோயாளிகளை அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
"எப்படி இருக்கீங்க.. மூச்சு விட முடியுதா.. மருத்துவர்கள் எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள், சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள்," என்று ஆறுதலாக அவர் நோயாளிகளிடம் பேசினார்.
நோயாளிகளைக் காண 'பிபிஇ' கவச உடை அணிந்து அவர் சென்றார். மருத்துவர்களும் அப்போது அவருடன் இருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் செயலை ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.
"நாட்டிலேயே 'பிபிஇ' கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை எந்த மாநில முதல்வரும் இதுவரை சந்தித்தது இல்லை. மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிட்டாலும்கூட, நோயாளிகளின் வார்டுக்கு முதல்வர்கள் யாரும் இதுவரை சென்றது இல்லை. ஆனால் முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக நோயாளிகளைச் சந்தித்துள்ளார்," என்று அவை குறிப்பிட்டுள்ளன.
கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளைச் சந்தித்த ஒரே முதல்வர் ஸ்டாலின் என ஊடகங்கள் கூறுகின்றன. படம்: தமிழக ஊடகம்

