அதிமுகவை சரிசெய்ய நிச்சயம் வருவேன்: சசிகலா சொன்னதாகப் பரவும் ஒலிப்பதிவு

அதிமுகவை சரிசெய்ய நிச்சயம் வருவேன்: சசிகலா சொன்னதாகப் பரவும் ஒலிப்பதிவு

2 mins read
189cf95e-373c-4f8d-a72c-ab37dbad7ef1
-

சென்னை: 'அதி­மு­கவை சரி­செய்ய நிச்­ச­யம் வரு­வேன்' என அதி­முக தொண்­டர் ஒரு­வ­ரி­டம் சசி­கலா பேசிய ஒலிப்­ப­திவு (ஆடியோ) ஒன்று சமூக ஊட­கங்­களில் பர­வி­வ­ரு­கிறது.

முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு அதி­மு­க­வில் பல்­வேறு மாற்­றங்­கள் நிகழ்ந்­து­விட்­டன. அண்­மை­யில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தோல்­வி­யைத் தழு­வி­ய­தால் ஆட்­சியை இழந்­தது அதி­முக.

இந்­நி­லை­யில், ஜெய­ல­லி­தா­வின் தோழி­யான சசி­கலா (படம்), தொண் ­டர் ஒரு­வ­ரி­டம் பேசிய ஒலிப்­ப­திவு ஒன்று சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வரு­கிறது.

அதில் தொண்­ட­ரி­டம் சசி­கலா, "நல்லா இருக்­கீங்­களா' என்று கேட்­கி­றார். அதற்கு அவர் 'நன்­றாக இருக்­கி­றேன். உங்­கள் குரலை கேட்­டதே பெரிய சந்­தோ­ஷம் அம்மா' என்­கி­றார்.

பின்­னர் சசி­கலா, 'ஒன்­றும் கவ­லைப்­ப­டா­தீங்க, கண்­டிப்­பாக கட்­சியைச் சரி பண்­ணி­ட­லாம்.. கொரோனா முடிந்­த­பின் நிச்­ச­யம் நான் வரு­வேன். எல்­லா­ரும் கவ­ன­மாக இருங்க," என்­கி­றார்.

பின் மற்­றொரு ஒலிப்­ப­தி­வில், "கட்சி வீணா­வதைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. அவர்­கள் சண்டை போடு­வது கஷ்­ட­மாக இருக்­கிறது. கொரோனா குறைந்த பிறகு கண்­டிப்­பாக எல்­லா­ரை­யும் சந்­திக்­கி­றேன்," என்று தொண்­டர் ஒரு­வ­ரி­டம் கூறி­யுள்­ளார்.

சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் கைதி­யாக பெங்­க­ளூரு பரப்­பன அக்­ர­ஹார சிறை­யில் தண்­டனை அனு­ப­வித்த சசி­கலா, விடு­த­லை­யாகி வெளியே வந்த பின் அர­சி­யல் சூழல் மாறும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில் அர­சி­ய­லில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தார்.

இந்­நி­லை­யில், தற்­போது 'மீண்­டும் வரு­வேன்' என்று கூறி­யுள்­ளது அர­சி­யல் களத்தில் பர­ப­ரப்பை ஏற்­ ப­டுத்­தி­யுள்­ளது.

இருப்பினும், இந்த ஒலிப்­ப­திவு உண்­மை­யா­னதா அல்­லது சசி­கலா போன்று யாரா­வது பேசி இருக்­கி­றார்­களா என்ற சந்­தே­க­மும் கிளம்பி இருக்­கிறது.