குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு: இறப்பு குறைகிறது

கடந்த 48 நாள்களில் ஆகக் குறைவான பலி எண்ணிக்கை பதிவானது

புது­டெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேலும் நேற்று முன்தினம், கடந்த 48 நாட்களில் ஆகக் குறைவான பலி எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 152,734 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது கண்டறியப்பட்ட நிலையில், ஒரேநாளில் சுமார் 270,000 பேர் தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்­றைய நில­வ­ரப்­படி டெல்­லி­யில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊர­டங்கு நீடிக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஹரி­யானா, ராஜஸ்­தான், கோவா, மிசோ­ரம், ஹிமாச்­சல் பிர­தேஷ், மேகா­லயா, திரி­புரா உள்­ளிட்ட மாநி­லங்­கள் ஜூன் முதல் வாரம் வரை சில தளர்­வு­க­ளு­டன் ஊர­டங்கை நீட்­டித்­துள்­ளன.

ஒடி­சா­வில் ஜூன் 17 வரை­யி­லும், மேற்கு வங்­கத்­தில் ஜூன் 15, நாகா­லாந்­தில் ஜூன் 11, மணிப்­பூ­ரில் ஜூன் 11, பஞ்­சா­பில் ஜூன் 10 வரை ஊர­டங்கு அம­லில் இருக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் கொரோனா பதி­வுக்­காக சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 2.26 மில்­லி­ய­னாக குறைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் ஜூலை மாத இறு­திக்­குள் 200 முதல் 250 மில்­லி­யன் கொரோனா தடுப்­பூ­சி­க­ளைக் கொள்மு­தல் செய்ய இருப்­ப­தாக மத்­திய அரசு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்தது

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதன் பலனாக கொரோனா தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொற்று குறைந்து வரும் நேரத்தில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

முழு ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் 37 மாவட்டங்களில் புது நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது எனினும் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தொற்றுப் பாதிப்பு இன்னும் குறையவில்லை. தமிழகத்தில் நேற்று முன்தினம் 28,864 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

கடந்த 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி (நேற்று) வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதை வரும் 7ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடமாடும் மளிகைக் கடைகள் நேற்று செயல்படத் தொடங்கின. இதற்கிடையே விரைவு ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு 1,808 மெட்ரிக் டன் உயிர்வாயுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!