ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி

ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி

1 mins read
34c97b5f-a25a-47f2-8a3c-770227c55578
-

புது­டெல்லி: நடப்­பாண்­டின் இறு­திக்­குள் நாட்­டில் உள்ள 18 வய­துக்கு மேற்­பட்ட தகுதி வாய்ந்த இந்­திய குடி­மக்­கள் அனை­வ­ருக்­கும் கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டு­வி­டும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தொற்­றுப்­ப­ர­வ­லைத் தடுக்க மத்­திய அரசு மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் குறித்து உச்ச நீதி­மன்­றம் தானாக முன்­வந்து விசா­ரித்து வரு­கிறது.

தடுப்­பூசி போடும் திட்­டத்தை அரசு எவ்­வாறு செயல்­ப­டுத்­து­கிறது என உச்ச நீதி­மன்­றம் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் உச்ச நீதி­மன்­றத்­தில் மத்­திய அரசு நேற்று மனு ஒன்­றைத் தாக்­கல் செய்­தது.

அதில், இந்த ஆண்டு இறு­திக்­குள் இந்­திய குடி­மக்­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போட்­டு­விட வேண்­டும் என இலக்கு நிர்­ண­யிப்­ப­தாக மத்­திய அரசு குறிப்­பிட்­டுள்­ளது.

இலக்கை எட்­டு­வ­தற்­கான பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் மத்­திய அரசு தனது மனு­வில் மேலும் தெரி­வித்­துள்­ளதாக 'தமிழ் இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.