சென்னை: பாலியல் புகார் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீரென தலைமறைவாகி இருப்பதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
மணிகண்டன் மீது நடிகை சாந்தினி என்பவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
'நாடோடிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள சாந்தினி அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவாகி உள்ளது.
இதையடுத்து எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.

