வெளியே சுற்றித் திரியும் கொரோனா நோயாளிகள்

வெளியே சுற்றித் திரியும் கொரோனா நோயாளிகள்

1 mins read
86392468-5a0f-488f-91d2-599bf5ed3c00
-
Google News Preferred Icon

வேலூர்: கொரோனா சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அடிக்கடி வெளியே சென்று வருவது தெரிய வந்துள்ளது.

நோயாளிகள் சிலர் மருத்துவமனைக்கு வெளியே உள்ள கடைகளுக்குச் சென்று தின்பண்டங்கள், தேநீர், சிற்றுண்டிகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும் மாலை வேளையில் மருத் துவமனைக்கு வெளியே அமர்ந்து பேசுகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பொது மக்களில் சிலர் புகார் அளித்துள்ளனர். உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மருத்துவமனையை விட்டு நோயாளிகள் வெளியே செல்லாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக 'மாலைமலர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.