ஒருபக்கம் குறையும் தொற்று பாதிப்பு; மறுபக்கம் அதிகரிப்பு

ஒருபக்கம் குறையும் தொற்று பாதிப்பு; மறுபக்கம் அதிகரிப்பு

2 mins read
9954771d-7741-4be0-b922-b72a358704bc
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. படம்: ஊடகம் -

அன்றாட பாதிப்பில் சென்னையை முந்திய கோவை; புதுக்கோட்டை ஆட்சியருக்கு தொற்று

புது­டெல்லி: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரும் நிலை­யில், மாநி­லத்­தின் மேற்கு, மத்­திய மாவட்­டங்­களில் தொற்று விகி­தம் அதி­க­ரித்து இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

நேற்­று­ முன்­தி­னம் தமி­ழ­கத்­தில் புதி­தாக 26,513 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று 490 இறப்­புச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

தற்­போது தமி­ழ­கத்­தில் சுமார் 296,000 பேர் கொரோனா பாதிப்­புக்கு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இது­வரை 24,722 பேர் தொற்­றுக்­குப் பலி­யாகிவிட்­ட­னர்.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி கோவை மாவட்­டத்­தில்­தான் அன்­றா­டம் பதி­வா­கும் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளது.

செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று கோவை­யில் 3,332 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னது.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக சென்­னை­யில் 2,467 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஈரோடு, திருப்­பூர், சேலம், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளி­லும் புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை ஆயி­ரத்­தைக் கடந்து பதி­வாகி உள்­ளது.

மாநி­லத்­தி­லேயே பெரம்­ப­லூர் மாவட்­டத்­தில்­தான் ஆகக் குறை­வாக 277 பேருக்கு மட்­டும் புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் கடந்த 20 தினங்­க­ளாக எட்டு மேற்கு மாவட்­டங்­களில் புது நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 73 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. இதே­போல் மத்­திய மாவட்­டங்­களில் 67 விழுக்­காடு அள­விற்கு புதிய நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

இதற்கு நேர்­மா­றாக, தெற்கு, வடக்கு மாவட்­டங்­களில் புதி­தாக நோய் தொற்­றி­யோர் எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது. குறிப்­பாக சென்­னை­யில் பாதிப்பு குறைந்து வரு­வ­தாக சுகா­தார அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த ஏப்­ரல் மாதம் தமி­ழ­கத்­தில் சுமார் 220 பேர் தின­மும் பலி­யாகி வந்­த­னர். தற்­போது அந்த எண்­ணிக்கை சரா­ச­ரி­யாக 480ஆக உள்­ளது.

ஆட்­சி­ய­ருக்கு கொரோனா

புதுக்­கோட்டை மாவட்ட ஆட்­சி­யர் உமா­ம­கேஸ்­வ­ரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்­பது உறு­தி­யாகி உள்­ளது.

இதை­ய­டுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.