அதிமுக தொண்டருடன் பேசும் சசிகலா: நான்காவது ஒலிப்பதிவால் சலசலப்பு

2 mins read
c44528d1-9736-4819-8816-d0bfffa4276b
-

புது­டெல்லி: அதி­முக உறுப்­பி­ன­ரு­டன் சசி­கலா பேசு­வது போன்ற நான்­கா­வது ஒலிப்­ப­திவு வெளி­யாகி உள்­ளது. இத­னால் அதி­முக வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பு நில­வு­கிறது.

தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்கு முன்பு தீவிர அர­சி­ய­லில் இருந்து தாம் வில­கு­வ­தாக சசி­கலா அறி­வித்­தி­ருந்­தார்.

தேர்­த­லில் அதி­முக தோல்வி அடைந்து ஆட்­சி­யை­யும் பறி­கொ­டுத்­துள்­ளது.

இத­னால் சசி­கலா மீண்­டும் அர­சி­யல் களத்­துக்கு வரு­வார் என்­றும் அதி­மு­கவை கைப்­பற்­று­வார் என்­றும் மீண்­டும் சில கணிப்­பு­கள் வெளி­வந்­துள்­ளன.

இந்­நி­லை­யில் அதி­மு­க­வில் உள்ள தமது ஆத­ர­வா­ளர்­க­ளைத் தொடர்­பு­கொண்டு சசி­கலா பேசி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மேலும் இது­தொ­டர்­பான மூன்று ஒலிப்­ப­திவு­களும் சமூக வலைத்­த­ளங்­களில் வலம் வரு­கின்­றன.

அந்த ஒலிப்­ப­தி­வில் இடம்­பெற்­றுள்ள உரை­யா­டல்­களில், கொரோனா நெருக்­கடி முடி­வுக்கு வந்த பிறகு தாம் அர­சி­ய­லுக்கு வரப்­போ­வ­தா­க­வும் அதி­மு­கவை காப்­பாற்­ற­வேண்­டும் என்­றும் சசி­கலா கூறு­வ­தாக பதி­வாகி உள்­ளது.

இதை­ய­டுத்து அதி­முக துணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் எம்­எல்­ஏ­வு­மான கே.பி. முனு­சாமி சசி­கலா தரப்பை சாடி­யுள்­ளார். ஆதா­யங்­க­ளுக்­கா­க­வும் அதி­கார போதைக்­கா­க­வும் சசி­கலா தரப்­பி­னர் சில முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள கே.பி.முனு­சாமி, சசி தரப்­பி­ன­ரின் எதிர்­பார்ப்­பு­கள் நிறை­வேற வாய்ப்­பில்லை என்று கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் நான்­கா­வது ஒலிப்­ப­திவு சென்­னை­யைச் சேர்ந்த ராஜா ரகு­பதி என்­ப­வ­ரு­டன் சசி­கலா பேசு­வ­தாக அமைந்­துள்­ளது. ராஜா­ரகு­ப­தி­யின் அதி­முக உறுப்­பி­னர் அட்­டை­யை­யும் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இந்­தப் புதிய ஒலிப்­ப­தி­வில், "யாரும் கவ­லைப்­பட வேண்­டாம். நான் நிச்­ச­யம் வரு­வேன். கட்­சி­யைச் சரி­செய்துவிட­லாம்," என்று சசி­கலா கூறு­வ­தாக அமைந்­துள்­ளது என தினத்­தந்தி செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இத­னால் அதி­மு­க­வில் சல­ச­லப்பு நில­வு­கிறது.