ஆதரவற்ற குழந்தைகளின் பராமரிப்புக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

1 mins read
224c38c7-a6ed-4817-a924-ea157f651608
-

புது­டெல்லி: கொரோனா தொற்­றால் பெற்­றோரை இழந்த ஆத­ர­வற்ற குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும் நிலை­யில், அக்­கு­ழந்­தை­க­ளின் பரா­ம­ரிப்பு தொடர்­பாக மத்­திய அரசு புதிய வழி­காட்­டு நெறி­முறை­களை அறி­வித்­துள்­ளது.

கொரோனா இரண்­டாம் அலை­யின் தாக்­கத்­தால் நாட்­டில் 9,436 குழந்­தை­கள் தாய், தந்தை ஆகிய இரு­வ­ரில் யாரே­னும் ஒரு­வரை இழந்­துள்­ள­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இவர்­களில் 1,700 பேர் தாய், தந்தை இரு­வ­ரை­யுமே இழந்­துள்­ள­தாக தேசிய குழந்­தை­கள் உரிமை பாது­காப்பு ஆணை­யம் கூறி­யுள்­ளது.

பெற்­றோரை இழந்து வாடும் குழந்­தை­களை மாநில அர­சு­கள் உட­ன­டி­யா­கக் கண்­ட­றிய வேண்­டும் என்­றும் இதற்­காக மாநில அள­வில் உதவி மையங்­களை உரு­வாக்க வேண்­டும் என்­றும் மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

தொற்று பாதித்த குழந்­தை­களுக்கு சிகிச்சை அளிக்க குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு மையத்­தி­லேயே தனி­மைப்­ப­டுத்­தும் வசதி, குழந்­தை­க­ளுக்கு உள­வி­யல் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக மன­நல மருத்­து­வர், ஆலோசனையாளர்கள் ஆகி­யோ­ரை­ நிய­மிக்க வேண்­டும் என மத்­திய அரசு கூறி­யுள்­ளது.