தொற்று பாதிப்பால் 17 விமானிகள் மரணம்

2 mins read
cf0c781e-8e2b-4e43-ada6-95e778357cd0
-

புது­டெல்லி: கொரோனா தொற்று பாதிப்­பால் இந்­தி­யா­வில் 17 விமானி­கள் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இவர்­கள் அனை­வ­ரும் ஏர் இந்­தியா, இண்­டிகோ, விஸ்­தாரா விமான நிறு­வ­னங்­களில் பணி­யாற்­றி­ய­வர்­கள் ஆவர்.

அனை­வ­ருமே கடந்த மே மாதம் இந்­தி­யா­வில் தொற்று பாதிப்பு உச்­சத்தை அடைந்­த­போது உயி­ரி­ழந்து விட்­ட­தாக 'நியூ இண்­டி­யன் எக்ஸ்­பி­ரஸ்' சில வட்­டா­ரங்­களை மேற்­கொள் காட்டி செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இண்­டிகோ நிறு­வ­னத்­தைச் சேர்ந்த 10 பேரும், விஸ்­தாரா நிறு­வ­னத்­தின் 2 விமா­னி­களும் இறந்­துள்­ள­னர். அதே­போல் தங்­கள் நிறு­வ­னத்­தின் 5 மூத்த விமா­னி­களை இழந்­துள்­ள­தாக ஏர் இந்­தியா தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தங்­கள் நிறு­வன விமா­னி­கள் இறந்­து­விட்­ட­தாக வெளி­யான தக­வல் குறித்து கருத்துத் தெரி­விக்க இண்­டிகோ நிறு­வ­னம் முன்­வ­ர­வில்லை.

எனி­னும் தங்­கள் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த 35 ஆயி­ரம் ஊழி­யர்­களில் 20 ஆயி­ரம் பேருக்கு முதல் தவணை தடுப்­பூசி போடப்­பட்டு விட்­ட­தாக அந்­நி­று­வ­னம் கூறி உள்­ளது.

மேலும், தங்­க­ளது நிறு­வ­னத்­தைச் சேர்ந்த விமானி உயி­ரி­ழந்­தால் அவ­ரது குடும்­பத்­தா­ருக்கு 5 கோடி ரூபாய் கிடைக்­கும் வகை­யில் நலத்­திட்­டங்­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­தாக அந்­நி­று­வன வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.

கொரோனா முதல் அலை­யின்­போது இந்­நி­று­வ­னத்­தைச் சேர்ந்த ஒரு­சில விமா­னி­கள் மட்­டுமே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் இரண்­டா­வது அலை­யில் 450 விமா­னி­க­ளுக்குத் தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

விஸ்­தாரா நிறு­வ­னத்­தின் 99 விழுக்­காடு ஊழி­யர்­க­ளுக்­கும் ஏர் இந்­தி­யா­வின் 96 விழுக்­காடு ஊழி­யர்­க­ளுக்­கும் ஒரு தவணை தடுப்­பூ­சி­யே­னும் போடப்­பட்டு விட்­ட­தாக மற்­றொரு தக­வல் தெரி­விக்­கிறது.

தொடக்கத்தில் பற்றாக்குறை காரணமாக ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் மே 15ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.