சீனா தனது படைகளை முழுமையாக விலக்கவில்லை: இந்தியா புகார்

புது­டெல்லி: எல்­லைப் பகு­தி­யில் இருந்து படை­களை திரும்­பப்­பெ­றும் நட­வ­டிக்­கையை சீனா முழு­மை­யான அள­வில் மேற்­கொள்­ள­வில்லை என இந்­திய வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வி­ஷ­யத்­தில் சீன அரசு உறு­தி­யான நிலைப்­பாட்­டைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் இதன்­மூ­லம் புதிய சம்­ப­வங்­க­ளைத் தவிர்க்­க­மு­டி­யும் என்­றும் இந்­தி­யத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"எல்­லை­யில் நில­வும் பதற்றத்தை தணிக்­க ­வேண்­டும் எனில் படை­களை விலக்­கிக்­கொள்­ளும் நடவடிக்கை விரைவாக முடி­வுக்கு வர­வேண்­டும். அப்­போ­து­தான் எல்­லை­யில் முழு­மை­யான, நீடித்த அமைதி திரும்­பும். இத்­த­கைய நடவடிக்­கை­தான் இரு­த­ரப்பு உற­வு­கள் முன்­னேற்­றம் காண கைகொடுக்­கும்," என இந்­திய வெளி­யு­றவு அமைச்­சின் செய்தித் தொடர்­பா­ளர் அரிந்­தம் பக்சி தெரி­வித்­துள்­ளார்.

இரு நாடு­க­ளின் எல்­லைப் பகுதி­யில் சீனா மீண்­டும் படைக­ளைக் குவித்து வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்ட எல்­லைப் பகு­தி­களில் மீண்­டும் கட்டு­மானப் பணி­களில் அந்­நாட்டு ராணு­வம் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அண்­மை­யில் தக­வல்­கள் வெளி­யா­கின. இது­கு­றித்து வியா­ழக்­கிழமை நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்குப் பதி­ல­ளித்த அரிந்­தம் பக்சி, எல்­லைப் பகு­தி­யில் சீனா தனது துருப்­பு­களை விலக்­கிக் கொள்­ளும் நட­வ­டிக்கை இன்­னும் முழுமை அடை­ய­வில்லை என்­றார்.

"இடைக்­கால ஏற்­பா­டாக இரு­தரப்­பும் புதிய சம்­ப­வங்­கள் நிக­ழாத வண்­ணம் செயல்­பட ஒப்­புக் கொண்­டுள்­ளன. இவ்­வி­ஷ­யத்­தில் உறு­தி­யான நிலைப்­பாட்­டைக் கடை­பி­டிப்­பது என ஒப்­புக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதுவே நமது எதிர்­பார்ப்பு. எனவே இந்­தப் புரி­த­லுக்கு எதி­ராக இரு­த­ரப்­பும் எந்­த­வொரு செய­லி­லும் ஈடு­ப­டக்­கூ­டாது என்­பது முக்­கி­யம்," என்­றார் அரிந்­தம் பக்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!