தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு; பெண் சிங்கம் பலி

2 mins read
de8906b0-4705-4db8-a928-6b0e32d50771
பெண் சிங்கத்துக்கு மூக்கில் திரவம் வழிந்தது. பின்னர் இறந்து விட்டதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.கோப்புப் படம்: -

தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கிருமித்தொற்று எப்படி விலங்குகளுக்குப் பரவியது என்பதை நிர்ணயிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு நீலா என்கிற ஒன்பது வயது பெண் சிங்கம் பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 26ஆம் தேதி அன்று பூங்­கா­வில் இருந்த ஐந்து சிங்­கங்­கள் சரி­யாக உணவு சாப்­பி­ட­வில்லை. மேலும் அவற்­றுக்கு தொடர்ந்து இரு­மல் இருந்­தது. கால்­நடை மருத்­துவ குழு­வி­னர் 13 ஆசிய சிங்­கங்­க­ளின் மாதி­ரி­களை சேக­ரித்து மத்­தியப் பிர­தேச மாநி­லம் போபா­லில் உள்ள உயிர் பாது­காப்பு நோய் தேசிய நிறு­வ­னத்­துக்கு அனுப்பி வைத்­த­னர்.

இதில் 13 சிங்­கங்­க­ளுக்கு கொரோனா பாதிப்பு இருப்­பது தெரிந்­தது.

இதற்­கி­டையே பூங்­கா­வில் சிங்­கம் உலா­வும் 2வது இருப்­பி­டத்தில் இருந்த 9 வய­தான நீலா என்ற பெண் சிங்­கம் திடீ­ரென இறந்­தது. அந்த சிங்­கத்­திற்கு மூக்­கில் இருந்து திர­வம் போல் தொடர்ந்து சுரந்து வந்­து­கொண்­டி­ருந்­தது.

இதையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற 12 சிங்கங்களும் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளன. அதன் உடல் நிலை, நடவடிக்கை குறித்து கால்நடை மருத்துவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வரு கிறார்கள். இதில் சில சிங்கங் களுக்கு உடலில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. வழக்கமான நிலையில் இருப்பதாக பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாக மாலை மலர் நாளேடு தெரிவித்தது.

சிங்கங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு உள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே ஊழியர்களிடம் இருந்து விலங்குகளுக்கு நோய் தொற்று பரவியதா? என்பது தெரியவரும்.