சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தொடர்பில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு சீரமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய பணிகளுக்கான இலக்குகளை நிர்ணயிப்பது, கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அக்குழு சீரமைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் துணைத் தலைவராகவும் பேராசிரியர். இராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவிப்பு தெரிவித்தது. திருநங்கை நர்த்தகி நடராஜ் உட்பட பல துறையாளர்கள் பலரும் பகுதி நேர உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

