ரவுடி ராஜ்யம்: துப்பாக்கி துளைக்காத கார், துப்பாக்கி காவலர்கள்; துப்பாக்கி ஆலை

ரவுடி ராஜ்யம்: துப்பாக்கி துளைக்காத கார், துப்பாக்கி காவலர்கள்; துப்பாக்கி ஆலை

2 mins read
913db108-9b66-4b48-b496-4c1b51ab41d8
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சிடி மணிக்கு விரோதிகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமிழ்­நாட்­டில் கூலிப்­படை தாதா என்று குறிப்­பி­டப்­பட்ட திண்­டுக்­கல் பாண்டி என்­ப­வ­ரின் வலது கரம் என்று வர்­ணிக்­கப்­படும் சிடி மணி­கண்­டன்,45, என்ற ரவுடியை இப்­போது சென்னை ஸ்டான்லி மருத்­து­வ­ம­னை­யில் தங்­கள் பொறுப்­பில் வைத்து போலி­சார் விசா­ரித்து வரு­கி­றார்­கள்.

ெசன்­னை­யின் பல்­வேறு பகுதி களில் திருட்டு சிடி­களை முன்பு விற்று வந்­த­தால் சிடி மணி என்று பெயர் பெற்ற இந்த ரவுடி, இம்­மாதம் 2ஆம்­ தேதி போலி­சி­டம் சிக்­கி­னார்.

அப்­போது சிடி மணி துப்­பாக்­கி­யால் சுட்­ட­தில் போலிஸ் அதி­காரி ஒரு­வர் காயம் அடைந்­தார். தப்­பிச் சென்றபோது மணிக்­குக் காயம் ஏற்­பட்­ட­தாகத் தெரிவிக்­கப்­பட்­டது. அதி­கா­ரி­கள் நடத்­திய புலன் விசா­ரணையில் திடுக்­கி­டும் பல நில­வரங்­கள் தெரிய வந்­தி­ருப்­ப­தாக தமி­ழக ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

சிடி மணி மீது கொலை, கொள்ளை, ஆயு­தங்­கள் பதுக்­கல், தொழில் அதி­பர்­க­ளைத் துப்­பாக்கி முனை­யில் மிரட்டி பணம் பறித்­தல், போலிசை துப்­பாக்­கி­யால் சுட்­டது என பல வழக்­கு­கள் உள்­ளன.

சிடி மணிக்கு எதி­ரி­கள் அதிகம். ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்­ப­வ­ரு­டன் சிடி மணி ஒரு காரில் சென்­ற­போது வெடி­குண்டு வீசி கொலை முயற்­சி­யும் நடந்­தது.

உயிர் பயத்­தில் இருந்து வந்த சிடி மணி, தன்­னைப் பாது­காத்­துக்­கொள்ள பல கோடி­களைச் செலவு செய்து பாது­காப்பு வளை­யத்தை ஏற்­ப­டுத்­தி­னார்.

சென்­னை­யில் உள்ள தனது சொகுசு பங்­களா முழு­வ­தும் கண்­கா­ணிப்பு சாத­னங்­க­ளைப் பொருத்­தி­வைத்­தார்.

பல சொகுசு கார்­களை வாங்­கி­ய­வர் சாலை­யில் செல்­லும்­போது தனக்கு முன்­னும்­ பின்­னும் துப்­பாக்கி ஏந்­திய கூட்­டா­ளி­க­ளு­டன் வலம் வந்­தார்.

ரூ.10 கோடி மதிப்­பில் குண்டு துளைக்­காத சொகுசு கார் ஒன்­றை­யும் அவர் வாங்­கி­னார். அந்­தக் காரை அவர் டெல்­லி­யில் மறைத்து வைத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதை சென்­னைக்கு கொண்டு வர போலிசார் தீவிர நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர்.

சிடி மணி துப்­பாக்கி தயா­ரிப்­பி­லும் ஈடுபட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதற்­காக மது­ரை­யில் ஒதுக்­குப்­பு­ற­மாக உள்ள பல ஏக்­கர் தென்­னந்­தோப்பை வாங்கி, சட்ட விரோத செயல்­களில் ஈடுபட்­ட­தும் தெரி­ய­வந்துள்­ள­தாக போலிஸ் வட்­டா­ரங்­களை மேற்­கோள்­காட்டி அந்த ஊட­கம் கூறி உள்­ளது.