யானை மீது மணமகன்; விதிமுறையை மீறி 500 பேருடன் தடபுடலாக நடந்த திருமணம்

1 mins read
64c15577-b0c7-4739-9eca-600f82831101
செண்டைமேளம் முழங்க, யானை மீது மணமகன் ஊர்வலம் வந்தார். படம்: ஊடகம் -

ஆலங்­கு­ளம்: கூட்­டம் கூடி­னால் கிரு­மிப் பர­வ­ல் அதி­க­ரிக்­கும் என்­ப­தால், திரு­மண விழாக்­களில் 50 பேருக்கு மேல் கூடக்­கூ­டாது என மாநில அரசு அண்மையில் சில கட்டுப்பாடுகளை விதித் திருந்தது.

இதை மீறும் வகை­யில் ஆலங்­கு­ளத்­தில் திரு­ம­ணம் ஒன்று மிக­வும் தட­பு­ட­லாக நடந்­துள்­ளது.

கடந்த ஞாயி­றன்று தளர்­வற்ற ஊர­டங்கு நடப்­பில் இருந்த நிலை­யில் சமூக இடை­வெளி, முகக்­க­வ­சத்தை மறந்து 500க்கும் மேற்­பட்ட உற­வி­னர்­கள் புடை­சூழ, செண்­டை­மே­ளம் முழங்க, யானை மீது அமர்ந்து மாப்­பிள்ளை ஊர்­வ­லம் வந்­துள்­ளார்.

இந்­தச் சம்­ப­வத்­துக்கு சமூக ஆர்­வ­லர்­கள் கண்­ட­னம் தெரிவித்­துள்­ள­னர்.

தென்­காசி மாவட்­டம், காசி­யா­பு­ரத்தைச் சேர்ந்தவர் வியா­பா­ரி­கள் நலச் சங்கச் செய­லா­ளர் ஆறு­முக பாண்டியன். இவரது மகன் பாஸ்­க­ரின் திரு­மணத்துக்கு அர­சி­யல் பிர­மு­கர்­கள் வரு­வ­தாக திரு­ம­ணப் பத்­தி­ரி­கை­யில் அச்­சி­டப்­பட்­டி­ருந்­தது.

இதனால், அந்தப் பக்­கம் போலி­சாரோ, அதி­கா­ரி­களோ யாரும் தலை­காட்டவில்லை.

இந்நிலையில், ஆலங்­கு­ளத்­தில் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் அம­லில் இருந்தபோதும், திரு­ம­ணம், விருந்தில் முகக்கவ­சம் அணி­யா­மல், சமூக இடை­வெ­ளியையும் பின்பற்றாமல் திரண்டுள்ளனர்.

ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்­ட பலர், தொற்­றுப் பர­வ­லுக்கு ஆளாகி அவதிக்குள்ளானது தெரிந்திருந்தும் அலட்சியமாக நடந்துகொண்டிருப் பது ஏன் என சமூக ஆர்­வ­லர்­கள் ஆதங்­கம் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்கிடையே, இந்த திரு­ம­ணம் குறித்த காெணாளி சமூக வலைத் தளத்தில் வெளி­யான நிலை­யில், நோய்த்தொற்று பர­வும் வகை­யில் ஆடம்­பரத் திரு­மண ஏற்­பா­டு­களைச் செய்த ஆறு­முக பாண்­டி­ய­னி­டம் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.