கும்பகோணம்: புகைப்படமா, ஓவியமா என எல்லோரையும் வியக்க வைக்கும் தத்ரூபமான ஓவியங்களின் அரசனாக விளங்கி வந்தவர் இளையராஜா.
பிரபல வார இதழில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன.
கிராமப்புற பெண்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் அளவுக்கு தத்ரூபமாக ஓவியங்களை வரைபவர். பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் இளையராஜா, 43, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியள வில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இளையராஜாவின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வலைத்தளவாசி களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே செம்பிய வரம்பில் எனும் கிராமத்தில் பிறந்த வர் இளையராஜா. அவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்படவே எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.

