யானைகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை

யானைகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை

1 mins read
b0528a54-45ca-4668-b50b-a3a09da065f6
-

ஊட்டி: சிங்கங்களை அடுத்து யானைகளுக்கும் இன்று கிருமி பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியான நிலையில், அதில் ஒரு சிங்கம் உயிரிழந்தது.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வண்டலூர் பூங்காவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிலையில், யானைகளுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதைத் தொடர்ந்து, முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

யானைகளை ஒன்றாக நிறுத்து வது தவிர்க்கப்பட்டு, ஒவ்வொரு யானைக்கும் தனித்தனியாக உணவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், யானைப் பாகன்கள், உதவியாளர்கள், முகாமில் பணி புரியும் வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்ெகாள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஊட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், "முதுமலை 'டாப்சிலிப்' முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ள மருத்துவக் குழு ஒன்று இன்று உதகை செல்ல உள்ளது. தொற்று இருப்பது உறுதியானால் உடனடியாக யானைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்," என்று தெரிவித்தார்.