மீன்பிடித் திருவிழா: ஒரேநேரத்தில் ஏரிக்குள் குவிந்த மக்கள்

மீன்பிடித் திருவிழா: ஒரேநேரத்தில் ஏரிக்குள் குவிந்த மக்கள்

1 mins read
a99a37ed-7c8f-48b5-84d0-36afbd62693e
-

தமிழகத்தில் ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில், மன்னம்பாடியில் உள்ள ஏரிக்குள் மன்னம்பாடி, படுகளாநத்தம், விளாங்காட்டூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஒரே சமயத்தில் இறங்கி மீன்பிடித்துள்ளனர். அப்போது, திடீரென்று வந்த போலிசாரைக் கண்ட பொதுமக்கள் தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைத் தூக்கிக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்துள்ளனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நடந்த விழாவில் 500 பேருக்கும் மேலானோர் போட்டி போட்டுக்ெகாண்டு ஏரியில் மீன்பிடித்தனர். இந்தக் காெணாளி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், பத்து போலிசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். படம்: ஊடகம்