சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு பெரிய அளவில் வெற்றி அடைந்திருப்பதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் 3,000 மருத்துவ களப் பணியாளர்களுக்கு உணவு தயாரித்து காவல் துறை வாகனம் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர். இதனை நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவலுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், முழு ஊரடங்கு பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது, தொற்றின் அளவு சரிபாதியாகக் குறைந்துள்ளது. பெரிய அளவில் நம்பிக்கையைத் தருகிறது. தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் கிருமிப் பரவல் கட்டுக்குள் இருக்கிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட குண
மடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் கிருமிப் பரவல் முதல் அலையின்போது எல்லாக் கடைகளும் மூடப்பட்டு இருந்த நேரத்தில் மதுக் கடைகள் திறந்து வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது மற்ற கடைகளுடன் மதுக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதிலிருந்தே இரண்டு ஆட்சி நிர்வாகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொள்ளலாம்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஊரடங்கால் பலன் கிடைத்துள்ளது

