சென்னை: தமிழக சட்டமன்றம் இந்த மாதத்துக்குள் கூட்டப்படும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தியதும் அதற்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் சட்டசபையில் பேசுவார்கள். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளிப்பார்.
அதன்பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டு, அடுத்த மாதம் (ஜூலை) வரவு செலவுத் திட்ட அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்வதற்காக சட்டமன்றம் மீண்டும் கூடும்.
நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். முந்தைய அதிமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தாக்கல் செய்தது.

